Wednesday, 28 May 2014

இந்திய கடலோரக் காவல் படை எனப்படும் இந்தியன் கோஸ்ட் கார்டு படை

கடலோர எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதம் தருவதெற்கென்று இந்திய கடலோரக் காவல் படை எனப்படும் இந்தியன் கோஸ்ட் கார்டு படை 1977ல் நிறுவப்பட்டது. இந்தப் படையில் தற்போது கெசடடு ஆபிசர் பிரிவிலான துணை கமாண்டெண்ட் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள்: கடலோரக் காவல் படையின் அஸிஸ்டெண்ட் கமாண்டெண்ட் பிரிவில் ஜெனரல் டியூடி (ஆண்), ஜெனரல் டியூடி பைலட், நேவிகேட்டர், அப்சர்வர் (ஆண் ), டெக்னிகல் பிராஞ்ச் - மெக்கானிகல் அண்டு எலக்ட்ரிகல் (ஆண்) ஆகிய பிரிவுகளிலும், ஷார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் பைலட்ஸ் - ஹெலிகாப்டர் அண்டு பிக்சடு விங் - இருபாலர், ஜெனரல் டியூடி (மகளிர்) ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது: அஸிஸ்டெண்ட் கமாண்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.1990க்கு பின்னரும் 30.06.1994க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும். ஷார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையிலான பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.1990க்கு பின்னரும், 30.06.1996க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: அஸிஸ்டெண்ட் கமாண்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட இள நிலை அறிவியல் பட்டப்படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இதே பிரிவின் டெக்னிகல் பிராஞ்சுக்கு விண்ணப்பிக்க இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பு தேவைப்படும். ஷார்ட் சர்வீஸ் கமிஷன் பதவிக்கு விண்ணப்பிக்க ப்ளஸ்டூ அளவிலான கல்வித் தகுதியுடன் இத்துறை சார்ந்த லைசென்ஸ் பெற்றிருப்பதும் தேவையாகும்.
உடல் தகுதி: பாதுகாப்புப் படை சார்ந்த பதவி என்பதால் மேற்கண்ட பதவிகளுக்கு சில குறைந்த பட்ச உடல் தகுதிகள் கட்டாயம் தேவை. விபரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் போன்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.06.2014
இணையதள முகவரி: <http://www.joinindiancoastguard.gov.in/PDF/Advertisement/OFFICER115.pdf>

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு பிரத்யேகமாகத் தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 1954ல் இந்திய அரசால் நிறுவப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் மேலும் வளர்ச்சி கண்டு தற்சமயம் எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பல்வேறு பொருட்களைத் தயாரிப்பது மற்றும் இதர சேவைகளுக்காக இந்தியா மட்டுமன்றி உலகெங்கும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் புரொபேஷனரி இன்ஜினியர்ஸ் பிரிவில் காலியாக உள்ள 200 காலியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள்: பெல் நிறுவனத்தின் புரொபேஷனரி இன்ஜினியர்ஸ் பதவியில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 100ம், மெக்கானிகலில் 75ம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 20ம், சிவில் பிரிவில் 3ம், எலக்ட்ரிகலில் 2ம் சேர்த்து மொத்தம் 200 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 01.05.2014 அடிப்படையில் இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக எலக்ட்ரானிக்ஸ், இ அண்டு சி, இ அண்டு டி, மெக்கானிகல், சிவில், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், சி.எஸ்., போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங் முடித்தவர்களும் தற்போது இதே படிப்பின் இறுதி தேர்வை எதிர்கொள்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பெல் நிறுவனத்தின் புரொபேஷனரி இன்ஜினியர்ஸ் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். இதன் பின் கிடைக்கும் ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்லிப்பை பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Post Box No.3076, Lodi Road, New Delhi-110003
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.06.2014
இணையதள முகவரி: <https://jobapply.in/BEL2014/DetailsAdv.htm#norms>