Pages

Pages

Friday, 29 August 2014

இந்திய விவசாய ஆர்ய்ச்சி கவுன்சிலில்நிதித்துறை அதிகாரி பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய விவசாய ஆர்ய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி மற்றும் நிதித்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Administrative Officer
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 21-30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Finance & Accounts Officer
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 21-30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். நிதியியல், அக்கவுண்டிங், காமர்ஸ் துறையில் அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
தேர்வுக் கட்டணம்: ரூ.500. இதனை சிண்டிகேட் வங்கியில் ஏதாவதொரு கிளையில் பணமாக செலுத்தவதற்கான செல்லான் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும். அல்லது டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். எஸ்,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. அவர்கள் பதிவு கட்டணமாக ரூ.20 மட்டும் செலுத்தவும்.
தேர்வு செய்யப்படும் முறை: அகில இந்திய அளவில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் மூலம் பணி நியமனம் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.11.2014
தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் கோயம்புத்தூர்.
விண்ணப்பிக்கும் முறை: www.asrb.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தவற்றை பிரிண்ட அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.asrb.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment