Pages

Pages

Wednesday, 25 February 2015

திருச்சி வானொலி நிலையத்தின் முதல் அலைவரிசை மற்றும் வானவில் பண்பலையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

திருச்சி வானொலி நிலையத்தின் முதல் அலைவரிசை மற்றும் வானவில் பண்பலையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பகுதி நேர அறிவிப்பாளர் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.  பண்பலை ஒலிபரப்புக்கு 25 வயதிலிருந்து 35 வயதுக்குள்பட்டராகவும், முதல் அலைவரிசைக்கு 25 வயதிலிருந்து 50 வயதுக்குள்பட்டரவாகவும் இருக்க வேண்டும்.
இலக்கியம், உலக நடப்பில்  நாட்டம் உள்ளராகவும், வானொலிக்கு ஏற்ற குரல் வளமும், உச்சரிப்பும் உடையவராக இருக்க வேண்டும். முறையான விண்ணப்பம் படிவம் பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய விவரத்தை எழுதி அனுப்பவேண்டும்.
குரல் தேர்வுக்கும், தேர்வில் வென்றால் வாணி  சான்றிதழுக்கான பயிற்சிக் கட்டணத்தை செலுத்த வேண்டும். குரல் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான தன் விவரக் கடிதம் திருச்சி வானொலி நிலையத்துக்கு இம்மாதம் 28-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment