Pages

Pages

Tuesday, 10 March 2015

ரயில்வே துறையில் சுமார் 2.25 லட்சம் பணியிடங்கள்

ரயில்வே துறையில் சுமார் 2.25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மக்களவையில் ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் எழுப்பியிருந்த கேள்விக்கு மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நிலவரப்படி, 2,25,863 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வழக்கமான ஓய்வு, விருப்ப ஓய்வு, இறப்பு, புதிய பணியிடங்கள் உருவாக்கம் ஆகியவற்றின் காரணமாக பணியிடங்கள் காலியாகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment