Monday, 2 June 2014

20th Technical Graduate Course (TGC120)

இந்திய ராணுவத்தில் 2015 ஜனவரியில் தொடங்க உள்ள 120வது டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்சில் சேருவதற்கு பி.இ., படித்த ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிப்பிரிவு: 120th Technical Graduate Course (TGC120) (July2015).

கோர்சில் உள்ள 60 இடங்கள் உள்ளன. அதன் விவரம்: சிவில் - 15, மெக்கானிக்கல் - 10, எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 5, ஆட்டோமொபைல்/ ஒர்க்ஷாப் டெக்னாலஜி - 1, ஏரோநாட்டிக்கல்/ ஏவியேஷன்/ ஏரோ ஸ்பேஸ்/ பாலிஸ்டிக்ஸ்/ ஏவினோக்சிஸ் - 1, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் - 5, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் - 8, எலக்ட்ரானிக்ஸ்/ பைபர் ஆப்டிக்ஸ் - 5, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் - 2, ஆர்க்கிடெக்சர் - 2, புட் டெக்னாலஜி/ பயோ டெக்னாலஜி - 2, கெமிக்கல் இன்ஜினியரிங் - 1, மெட்டாலர்ஜி - 1, இன்டஸ்ட்ரியல்/ மேனுபேக்சரிங் இன்ஜினியரிங் - 2.

வயது:

20 லிருந்து 27க்குள். விண்ணப்பதாரர்கள் 2.1.1988க்கும், 1.1.1995க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்.

தகுதி:

மேற்குறிப்பிடப்பட்ட பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ. பட்டம் (இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்). இவர்கள் பயிற்சி தொடங்கிய நாளிலிருந்து 12 வாரங்களுக்குள் தகுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின்னர் தகுதியானவர்களுக்கு உ.பி., அலகாபாத், மத்திய பிரதேசம் போபால், கர்நாடகா பெங்களூர் ஆகிய இடங்களில் 5 நாட்கள் தேர்வு நடைபெறும். முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே அடுத்த கட்ட தேர்வுகள் நடைபெறும்.

உடற்தகுதி:

உயரம்: 157.5 செ.மீ., கண் பார்வை, தூர பார்வை 6/6, 6/18. இந்த கோர்சுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு டேராடூன், மிலிட்டரி அகாடமியில் ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குப் பின் லெப்டினென்ட் தரத்தில் பணியமர்த்தப்படுவர்.

பயிற்சி காலத்தில் மாதம் ரூ.21 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் ரூ.15,600 - 39,100 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிரின்ட் அவுட் அனுப்ப தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.6.2014.

No comments:

Post a Comment