Monday, 2 June 2014

ராணுவத்தில் 218 காலியிடங்கள்

10ம் வகுப்பு தகுதிக்கு ராணுவத்தில் 218 காலியிடங்கள்
ராஞ்சியிலுள்ள ராணுவ அலுவலகத்திலும், பனகார் ராணுவ அலுவலகத்திலும் காலியாக உள்ள மஸ்தூர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம' இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்:

1. ராஞ்சியிலுள்ள ராணுவ அலுவலகத்தில் மஸ்தூர்:

124 இடங்கள் (பொது - 62, எஸ்சி - 15, எஸ்டி - 32, ஒபிசி - 15) இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 இடங்களும், 12 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், விளையாட்டு வீரர்களுக்கு 6 இடங்களும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2. பனகாரிலுள்ள ராணுவ அலுவலகத்தில் மஸ்தூர்:

94 இடங்கள் (பொது - 47, எஸ்சி - 21, எஸ்டி - 5, ஒபிசி - 21). இவற்றில் 3 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 9 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 5 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்:

மேற்கண்ட இரு பணிகளுக்கும் ரூ.5,200 - 20,200.

வயது:

18 முதல் 25க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியோடு இந்தி மொழியில் பேச தெரிந்திருப்பது விரும்பத்தக்கது. எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடல் திறனை பரிசோதிக்கும் தகுதித்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கபடுவர்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பதாரர்கள் எந்த ராணுவ அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறாரோ அதை உறையின் முகப்பில் குறிப்பிடவும்.

விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்று, வயது சான்று, ஜாதி சான்று, உடல் ஊன சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினர் பணி விவர சான்றிதழ், 25 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதப்பட்ட உறை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Commandant,
FAD Panagarh,
Pin 900 349.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.5.2014. 

No comments:

Post a Comment