சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு சலுகைகள்
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
புதுடெல்லி, ஜூன்.2-சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சில சலுகைகளை அறிவித்து உள்ளது.சிவில் சர்வீசஸ் தேர்வுஐ.ஏ.எஸ்.,
ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்து
எடுப்பதற்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வு முதன்மை தேர்வு, பிரதான தேர்வு,
நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி நடைபெற
உள்ளது. இதன்மூலம் 1,291 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 26 இடங்கள்
மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.சலுகைகள்இந்த
நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையம் சில சலுகைகளை அறிவித்து உள்ளது. அதன்படி, இந்த ஆண்டு முதல்
வயது வரம்பு தளத்தப்படுவதோடு, கூடுதலாக 2 முறை தேர்வு எழுதவும் வாய்ப்பு
வழங்கப்படுவதாக செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதாவது,
சிவில் சர்வீசஸ் தேர்வுகளை பொதுப்பிரிவினர் இதுவரை 4 முறை மட்டுமே எழுத
வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் அவர்கள் கூடுதலாக 2 முறை எழுதலாம்.
அதாவது மொத்தம் 6 முறை எழுதலாம். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 7 தடவை
வரை எழுதலாம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இந்த
கட்டுப்பாடு கிடையாது.வயது வரம்புமேலும் தேர்வு எழுதுவதற்காக
வயது வரம்பும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது பொதுப்பிரிவினருக்கு
வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த வயது வரம்பு இதர
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகள் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கும், மற்றும் காஷ்மீர்
மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment