Monday, 2 June 2014

கெயில் நிறுவனத்தில் போர்மென் மற்றும் இன்ஜினியர் வேலை

கெயில் நிறுவனத்தில் போர்மென் மற்றும் இன்ஜினியர் வேலை 85 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள கெயில் நிறுவனத்தில் போர்மென் மற்றும் இன்ஜினியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியின் விவரம்:

போர்மேன் (குருப் சி):

1. போர்மென் (மெக்கானிக்கல்): 9 இடங்கள் (பொது - 5, எஸ்சி - 1, எஸ்டி - 1, ஒபிசி - 2).

தகுதி:

மெக்கானிக்கல்/ புரொடக்சன்/ புரொடக்சன் மற்றும் இன்டஸ்ட்ரியல்/ உற்பத்தி/ மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய பாடங்களில் 60 சதவீத தேர்ச்சியுடன் டிப்ளமோ. பெட்ரோ கெமிக்கல்/ உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

2. போர்மென் (எலக்ட்ரிக்கல்): 7 இடங்கள் (பொது - 5, எஸ்டி - 1, ஒபிசி - 1)

தகுதி:

60 சதவீத தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடங்களில் டிப்ளமோ. பெட்ரோ கெமிக்கல்/ உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

3. போர்மென் (இன்ஸ்ட்ருமென்டேசன்): 7 இடங்கள் (பொது - 2, எஸ்சி - 2, எஸ்டி - 1, ஒபிசி - 2)

தகுதி:

60 சதவீத தேர்ச்சியுடன் இன்ஸ்ட்ருமென்டேசன்/ இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன்/ எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன்/ எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் டிப்ளமோ. பெட்ரோ கெமிக்கல்/ உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

4. போர்மென் (கெமிக்கல்): 32 இடங்கள் (பொது - 18, எஸ்சி - 5, எஸ்டி - 3, ஒபிசி - 6)

தகுதி:

60 சதவீத தேர்ச்சியுடன் கெமிக்கல்/ பெட்ரோ கெமிக்கல்/ கெமிக்கல் டெக்னாலஜி/ பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் டிப்ளமோ மற்றும் பெட்ரோ கெமிக்கல்/ உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.

வயது:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 4.6.2014 அன்று விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.

சம்பளம்:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் ரூ.14,500 - 36,000.

விண்ணப்ப கட்டணம்:


ரூ.50. (பொது மற்றும் ஒபிசியினருக்கு மட்டும்) இதை 'GAIL (India) imited' என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி., எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

டிரேட் டெஸ்ட், நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் 'www.gailonline.com' என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:


THE DEPUTY MANAGER (HRD),
GAIL (India) Limited,
GAIL Bhawan,
16, Bhikaiji Cama Place,
R.K. Puram,
NEWDELHI 110066.


இன்ஜினியர் பணியிடங்கள்:

1. சீனியர் இன்ஜினியர்: (கெமிக்கல்): 15 இடங்கள் (பொது - 8, எஸ்சி - 2, எஸ்டி - 2, ஒபிசி - 3).

தகுதி:

65 சதவீத தேர்ச்சியுடன் கெமிக்கல்/ பெட்ரோ கெமிக்கல்/ கெமிக்கல் டெக்னாலஜி/ பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் பி.இ., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

2. சீனியர் இன்ஜினியர்: (மெக்கானிக்கல்): 5 இடங்கள் (பொது - 4, ஒபிசி - 1)

தகுதி:

65 சதவீத தேர்ச்சியுடன் மெக்கானிக்கல்/ புரடக்சன்/ புரடக்சன் மற்றும் இன்டஸ்ட்ரியல்/ மேனுபேக்சரிங்/ மெக்கானிக்கல் மற்றும் ஆட்மோமொபைல் ஆகிய பாடங்களில் பி.இ., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

3. சீனியர் இன்ஜினியர்: (எலக்ட்ரிக்கல்): 5 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 3)

தகுதி:

65 சதவீத தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் பி.இ., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

4. சீனியர் இன்ஜினியர்: (இன்ஸ்ட்ருமென்டேசன்): 5 இடங்கள் (பொது - 2, எஸ்சி - 1, ஒபிசி - 2):

தகுதி:

65 சதவீத தேர்ச்சியுடன் இன்ஸ்ட்ருமென்டேசன்/ இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன்/ எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன்/ எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் பி.இ., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

வயது:

மேற்கண்ட அனைத்து இன்ஜினியர் பணிகளுக்கும் 4.6.2014 அன்று 30க்குள்.

அனைத்து பணிகளுக்கும் சம்பளம்: ரூ.24,900 - 50,500.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.200. இதை 'GAIL (India) Limited' என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுத்து அனுப்ப வேண்டும். குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Manager (HRD),
GAIL (India) Limited,
GAIL Bhawan,
16, Bhikaiji Cama Place,
R.K.PURAM,
NEWDELHI 110066.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.6.2014.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்:
19.6.2014.

No comments:

Post a Comment