Tuesday, 2 September 2014

அஞ்சல் துறை மல்டி டாஸ்கிங் ஸ்டாப்

நம் நாட்டின் அஞ்சல் துறை பல நூற்றாண்டுகளைக் கடந்து வரலாற்று சிறப்புடைய தொன்மையான துறையாகும். கிழக்கிந்தியக் கம்பெனி காலத்திலேயே தமிழ் நாட்டிலும் அஞ்சல் செயல்பாடுகள் துவங்கிவிட்டன. இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இ-மெயில், எஸ்.எம்.எஸ்., மொபைல் என்ற மாற்றங்கள் வந்த போதும் உணர்வுபூர்வமான தகவல் பரிமாற்றத்திற்கு இத்துறையே அடையாளமாக இருக்கிறது.
இத்தகைய பெருமைமிக்க தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 34 மல்டி-டாஸ்கிங் ஊழியர் காலியிடங்களை விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனத்தின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


காலியிட விபரம்: மல்டி டாஸ்கிங் ஸ்டாப் காலியிடங்கள் நிர்வாக அலுவலகங்கள் மற்றும் சப்-ஆர்டினேட் ஆபிஸ் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன.
வயது: தமிழ்நாடு போஸ்டல் சர்க்கிளின் மல்டி டாஸ்கிங் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பு அல்லது ஐ.டி.ஐ., படிப்பை முடித்தவர்கள் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக் கட்டணம்: தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் மூலம் ரூ.100/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை சேர்த்து தொடர்புடைய அலுவலருக்கு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.


\விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.09.2014

இணையதள முகவரிhttp://tamilnadupost.nic.in/rec/Notification.pdf

No comments:

Post a Comment