Tuesday, 2 September 2014

பாரத ஸ்டேட் வங்கி Probationary Officer

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாக செய்துவரும் பொதுத்துறை வங்கியாகும். ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பைகானர் போன்ற ஐந்து துணை வங்கிகள் இந்த வங்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த துணை வங்கிகளில் காலியாக உள்ள 2986 புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் 424 பின்னடைவு பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன.
பல்வேறு பொதுத்துறை வங்கிகள் பொது எழுத்து தேர்வின் மூலம் பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஆனால் ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளுக்கு தனியே எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறவும்.
நிறுவனம்: SBI Associate Bank
பணி: Probationary Officer
காலியிடங்கள்: 2986
பின்னடைவு பணியிடங்கள்: 424
கிளை வங்கிகள் வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. SBBJ : 350
2. SBH : 900
3. SBM : 500
4. SBP : 100
5. SBT : 1136
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.09.1984 - 01.09.1993 தேதிகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. எஸ், எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைன், ஆப்லைன் இரு முறைகளிலும் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.statebankofindia.com, www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.09.2014
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:18.09.2014
ஆப்லைன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 20.09.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 2014
மேலும் தேர்வு திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறையில் எழும் சந்தேகங்களுக்கு www.statebankofindia.com, www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment