Saturday, 30 August 2014

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் பஞ்சாப், பதன் கோட்டில் இயங்கும் இந்திய ராணுவத்தின் யூனிட்டில் காலியாக உள்ள 100 குருப் 'சி' பணி

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் பஞ்சாப், பதன் கோட்டில் இயங்கும் இந்திய ராணுவத்தின் யூனிட்டில் காலியாக உள்ள 100 குருப் 'சி' பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:


1. வெஹிக்கிள் மெக்கானிக்: 1 இடம் (பொது). 

சம்பளம்: 


ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. 

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் வாகனங்களை பழுதுபார்க்கும் கருவிகளின் எண்கள் மற்றும் அதன் பெயர்களை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட டிரேடில் ஓராண்டு முன் அனுபவம். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

2. சவைவாலா: 2 இடங்கள் (பொது). 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. 

தகுதி: 

மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஓராண்டு முன் அனுபவம். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

3. லோயர் டிவிசன் கிளார்க்: 4 இடங்கள் (பொது - 1, எஸ்சி - 2, ஒபிசி - 1). 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. 

தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும். டைப் செய்யும் திறன். ஆண்களும், பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

4. கிளீனர்: 
3 இடங்கள் (பொது - 2, எஸ்சி - 1). 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. 

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் முன்அனுபவம். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

5. சமையலர்: 3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1). 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. 

தகுதி: 

மெட்ரிகுலேசன் தேர்ச்சியோடு சமையல் கலையில் நிபுணராக இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

6. சிவிலியன் மோட்டார் டிரைவர்: 86 இடங்கள் (பொது - 42, எஸ்சி - 23, ஒபிசி - 21). 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. 

தகுதி: 

மெட்ரிகுலேசன் தேர்ச்சி மற்றும் கனரக ஓட்டுநர் உரிமத்துடன் 2 ஆண்டுகள் முன் அனுபவம். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

7. தார்பாலின் மேக்கர்: 1 இடம் (பொது). 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. 

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம்.

வயது:

29.8.2014 தேதியின்படி வெஹிக்கிள் மெக்கானிக், சவேவாலா, லோயர் டிவிசன் கிளார்க், கிளீனர், சமையலர், தார்பாலின் மேக்கர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 18 முதல் 25க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். சிவிலியன் மோட்டார் டிரைவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 18 முதல் 27க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சியினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.persmin.nic.in/dopt.asp என்ற இணையதளத்தை பார்க்கவும். 

விண்ணப்பத்தை பதிவு அல்லது விரைவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

Commanding Officer,
5121 ASC BN (MT),
PIN: 905121,
C/O 56 APO.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.8.2014. 

No comments:

Post a Comment