Saturday, 30 August 2014

கமாரியா ஆயுத தொழிற்சாலை பணியிடங்களுக்கு பிளஸ் 2/ 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேசம், ஜபல்பூரில் செயல்படும் கமாரியா ஆயுத தொழிற்சாலையிலும், கட்னி ஆயுத தொழிற்சாலையிலும் காலியாக உள்ள 164 பணியிடங்களுக்கு பிளஸ் 2/ 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்:

1. மிட் வொய்ப்: 

1 இடம் (பொது)

வயது: 

18 லிருந்து 27க்குள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000. 

தகுதி: 

அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி. 2 வருட Auxiliary Nursing Midwife Course படித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் அறிவு அவசியம்.

2. பயர்மேன்: 

18 இடங்கள் (பொது - 9, ஒபிசி - 1, எஸ்சி - 4, எஸ்டி - 4). இதில் 3 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

வயது: 

18 லிருந்து 27க்குள்.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. 

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாதங்களுக்கு குறையாத பயர் பைட்டிங் கோர்ஸ் படிப்பு மற்றும் உயரம்: 165 செ.மீ., மார்பளவு: 81.5 செ.மீ., எடை: 50 கிலோ.

3. ஸ்டோர் கீப்பர்:

9 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 1, எஸ்சி - 1, எஸ்டி - 2): இதில் ஒரு இடம் முன்னாள் ராணுவத்தினருக்கும், 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

வயது: 

18 லிருந்து 27க்குள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. 

தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சி. கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது.

4. சிவிலியன் மோட்டார் டிரைவர்: (ஒஜி): 

7 இடங்கள். (பொது - 4, ஒபிசி - 1, எஸ்டி - 2). இதில் ஒரு இடம் முன்னாள் ராணுவத்தினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

வயது: 

18 லிருந்து 32க்குள். 

சம்பளம்: 
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. 

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

5. டெலிபோன் ஆபரேட்டர் (கிரேடு - 2).

1 இடம் (பொது). 

வயது: 

18 லிருந்து 27க்குள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. 

தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சியுடன் பிபிஎக்ஸ் போர்டு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்சேஞ்சுகளை கையாளும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

6. தர்வான்:

19 இடங்கள் (பொது - 10, ஒபிசி - 1, எஸ்சி - 4, எஸ்டி - 4). இதில் 3 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

வயது: 

20 லிருந்து 27க்குள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. 

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி.

7. வார்டு சஹாயாக்:

3 இடங்கள் (பொது). 

வயது: 

18 லிருந்து 27க்குள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. 

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சி. முதலுதவி, நர்சிங், வார்டு நடவடிக்கைகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

22.8.2014 தேதியின்படி அதிகபட்ச வயதுவரம்பு கணக்கிடப்படும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.50. ' The Senior General Manager, Ordnance Factory Khamari ' என்ற பெயருக்கு Jabalpur™மாற்றத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ordkham.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior General Manager,
Ordnance Factory Khamaria,
Jabalpur,
MADHYA PRADESH.
PIN: 482005.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.8.2014. 
 
மத்திய பிரதேசம் கட்னி ஆயுத தொழிற்சாலையில் காலியாக உள்ள 103 இடங்களுக்கு மெட்ரிகுலேசனுடன் தொழிற் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. கெமிக்கல் புராசஸ் வொர்க்கர்: 6 இடங்கள் (பொது - 5, எஸ்டி - 1).

2. எலக்ட்ரீசியன்: 2 இடங்கள் (பொது).

3. எலக்ட்ரோபிளேட்டர்: 3 இடங்கள் (பொது - 2, எஸ்டி - 1).

4. எக்சாமினர்: 17 இடங்கள் (பொது - 9, எஸ்சி - 2, எஸ்டி - 2, ஒபிசி - 4).

5. பிட்டர்: 8 இடங்கள் (பொது - 5, எஸ்சி - 1, எஸ்டி - 2).

6. கிரைண்டர்: 3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1).

7. மெஷினிஸ்ட்: 31 இடங்கள் (பொது - 17, எஸ்சி - 4, எஸ்டி - 6, ஒபிசி - 4).

8. மேசான்: 2 இடங்கள் (பொது).

9. மில்ரைட்: 9 இடங்கள் (பொது - 4, எஸ்சி - 1, எஸ்டி - 2, ஒபிசி - 2).

10. மோல்டர்: 15 இடங்கள் (பொது - 9, எஸ்சி - 2, எஸ்டி - 2, ஒபிசி - 2).

11. பெயின்டர்: 1 இடம் (பொது).

12. டர்னர்: 6 இடங்கள் (பொது - 3, எஸ்சி - 2, எஸ்டி - 1).

கல்வித்தகுதி:

மெட்ரிகுலேசனுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் என்சிவிடி சான்றிதழ். 

சம்பளம்: 


ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

வயது, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ofkatonline.org.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும். 

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:
 23.8.2014.

No comments:

Post a Comment