Thursday, 28 August 2014

மெடிக்கல் சர்வீசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு




மெடிக்கல் சர்வீசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு எனப்படும் எம்.ஆர்.பி., அமைப்பு அரசுத்துறை சார்ந்த மருத்துவப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக தமிழகத்தில் காலியாக உள்ள 2176 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரங்கள்எம்.ஆர்.பி.,யின் சார்பாக அசிஸ்டன்ட் சர்ஜன் - ஜெனரல் எம்.பி.பி.எஸ்., பிரிவில் 2142 இடங்களும், அசிஸ்டன்ட் சர்ஜன் - டென்டல் பிரிவில் 34 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தகுதி: ஜெனரல் சர்ஜன் பிரிவுக்கு உச்சபட்ச வயது 35 ஆகவும், டென்டல் பிரிவுக்கு அதிகபட்ச வயது 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு இதில் சலுகைகள் உள்ளது. ஜெனரல் சர்ஜன் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பையும், டென்டல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.டி.எஸ்., பட்டப் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். முழுமையான தேவைகளை இணையதளத்திலிருந்து அறியவும்.
தேர்ச்சி முறை: சென்னை மையத்தில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வை 150 நிமிடங்களில் முடிக்கப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்காணல் மூலம் தேர்ச்சி செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை விண்ணப்பக் கட்டணமான ரூ.750/-உடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 01.09.2014
இணையதள முகவரி: www.mrb.tn.gov.in

No comments:

Post a Comment