Friday, 29 August 2014

SSC-மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 11 பணி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: கொல்கத்தா சணல் மேம்பாட்டு இயக்குனரகத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 01.09.14 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் கிராமப் பொருளாதாரம், செடி வளர்ப்பு, மரபு வழி பண்பியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கொல்கத்தா விலங்குகள் பாதுகாப்புத் துறையில் தொற்றுநோய் தடுப்பு ஆய்வாளர்
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: விலங்கியல் அல்லது நுண்ணுயிரியல் துறையில் பட்டப்படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

பணி: கொல்கத்தா தேசிய வரைபட அமைப்பில் சீனியர் ஸ்டோர் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று வரைபடம் தொடர்பான தகவல்களை பராமரிப்பதில் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கொல்கத்தா தேசிய வரைபட அமைப்பில் இளநிலை புவியியல் உதவியாளர்
காலியிடங்கள்: 07
வயது வரம்பு: 01.09.2014 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: புவியியல், கணிதம், புள்ளியியல் போன்ற ஏதாவதொரு துறையில் ஹானர்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை சென்ட்ரல் ரெக்ருட்மென்ட் ஃபீ ஸ்டாம்ப் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் போன்றோர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு, ஆளுமைத் தேர்வு, செயல்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Regional Director,
Staff Selection Commission (ER),
234/4 A.J.C. Bose Road,
NIZAM PALACE, Ist MSO BUILDING,
8th Floor
KOLKATA 700020.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.09.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sscer.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment