Saturday, 30 August 2014

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிளைகளில் 2015-16ல் காலியாக உள்ள கிளார்க் பணி

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிளைகளில் 2015-16ல் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கு பொது எழுத்துத் தேர்வை வங்கிப் பணியாளர் தேர்வாணைய நிறுவனம் (Institute of Banking Personnel Selection)
அறிவித்துள்ளது. இதற்கான பொது எழுத்துத் தேர்வு ஆன்லைனில் டிசம்பரில் நடைபெறும்.

2015 ஜனவரியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பிப்ரவரியில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். ஏப்ரலில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

கல்வித்தகுதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், அதை செலுத்தும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ibps.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.9.2014.

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்: 3.9.2014.

No comments:

Post a Comment