Thursday, 27 March 2014

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் உள்ள விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் இயங்கும் தரிசு நில விவசாய ஆராய்ச்சி மையத்தில் செயல்திறன் வாய்ந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம்:

செயல்திறன் பல்நோக்கு பணியாளர்கள்:

மொத்த இடங்கள்: 20 (பொது - 9, எஸ்சி - 1, எஸ்டி - 3, ஒபிசி - 6, மாற்றுத்திறனாளிகள் - 1)

சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி.

வயது: 31.3.2014ன்படி 18 முதல் 25க்குள். (எஸ்சி., எஸ்டி., ஒபிசியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு).

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100. இதை 'ICAR Unit A/c, CRIDA' என்ற பெயரில் ஐதராபாத்தில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

மாதிரி விண்ணப்பம், கல்வித்தகுதி, முன் அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.crida.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,
Central Research Institute for Dryland Agriculture,
Santhoshnagar,
Saidabad Post,
Hyderabad 500 059 (A.P.).


விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2014.

No comments:

Post a Comment