Thursday, 27 March 2014

CMPDI Recruitment

இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான மத்திய சுரங்க திட்ட மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்:


1. ஜூனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட்:

42 இடங்கள் (பொது - 19, ஒபிசி - 11, எஸ்சி - 8, எஸ்டி - 4). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்: ரூ.17,605.

தகுதி: வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு அறிவியலில் ஏதேனும் ஒரு பட்டம்.

2. சர்வேயர் (சிவில்):

23 இடங்கள் (பொது - 13, ஒபிசி - 5, எஸ்சி - 3, எஸ்டி - 2). ஒரு இடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:
ரூ.19,035.

தகுதி: மெட்ரிகுலேசனுடன் சிவில் சர்வேயிங் பாடத்தில் ஏதேனும் ஒரு கோர்ஸ் படித்திருக்க வேண்டும் மற்றும் ஓராண்டு முன் அனுபவம்.

3. ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்):

25 இடங்கள் (பொது - 13, ஒபிசி - 8, எஸ்சி - 2, எஸ்டி - 2). ஒரு இடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.19,035.

தகுதி: மெட்ரிகுலேசனுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் வேகமும், அதை நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

4. ஏசி பிளான்ட்/ யுபிஎஸ் அட்டெண்டென்ட்:

1 இடம் (பொது)

சம்பளம்: (ஒரு நாளைக்கு) ரூ.649.69.

தகுதி:
மெட்ரிகுலேசனுடன் ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏசி மெக்கானிக் படிப்பில் ஐடிஐ அல்லது அதற்கு சமமான படிப்பு.

5. அக்கவுன்டென்ட்:

8 இடங்கள் (ஒபிசி - 3, எஸ்சி - 3, எஸ்டி - 2).

சம்பளம்: ரூ.22,149.

தகுதி:
ஐசிடபிள்யூஏ அல்லது சிஏ படிப்பில் இன்டர்மீடியட்.

வயது:

1.3.2014 அன்று 18 முதல் 30க்குள். ஒபிசியினர் 33 வயது வரையிலும், எஸ்சி., எஸ்டியினருக்கு 35 வயது வரையிலும், பொதுப்பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:


ரூ.150. ( விண்ணப்ப கட்டணம் ரூ.100 மற்றும் வங்கி கட்டணம் ரூ.50). தபாலில் விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில்
CMPDI Recruitment Account (Power Jyothi Account No: 33596488594) என்ற கணக்கில் செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

www.cmpdi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பிரின்ட் அவுட் மற்றும் தபாலில் விண்ணப்பிப்பவர்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy General Manager (P-A),
Central Mine Planning - Design Institute Limited,
Gondwana Place,
Kanke Road,
Ranchi 834 031.
Chattisgarh.


ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விண்ணப்பங்களின் பிரிண்ட் அவுட்டை விரைவு அல்லது பதிவுத் தபாலில் அனுப்ப கடைசி நாள்: 31.3.2014.

No comments:

Post a Comment