Monday, 16 February 2015

கான்ஸ்டபிள் வேலை

எஸ்.எஸ்.சி., என்னும் மத்திய அரசின் ஊழியர் தேர்வாணையம் இந்தியாவின் பல்வேறு மத்திய காவல் படைகளில் காலியாக உள்ள 62 ஆயிரத்து 390 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பி.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., சி.ஐ.எஸ்.எப்.,
ஐ.டி.பி.பி., எஸ்.எஸ்.பி., மற்றும் பிற மத்திய பாதுகாப்புப் படைகளில் இந்த காலியிடங்கள் உள்ளன. 
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தது 170 செ. மீ. உயரம் இருக்க வேண்டும். பெண்கள் 157 செ. மீ., உயரம் இருக்க வேண்டும். ஆண்களுக்கு விரிவடையாத நிலையில் மார்பளவு குறைந்தது 80 செ.மீ., இருக்க வேண்டும். குறைந்தது 5 செ.மீ., விரிவடைய வேண்டும். இரு பாலருக்கும் உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். 
வயது தகுதி: 1.8.2015 அன்று 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். வழக்கமான வயது வரம்பு சலுகைகள் குறிப்பிட்டபிரிவினருக்கு உண்டு. 
கல்வித்தகுதி: 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு முறை: உடற்தகுதித் தேர்வு, உடற் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு ஆகியவை மூலமாக தேர்வு செய்யப்படும். 
விண்ணப்பக் கட்டணம்: ஆன் லைன் மற்றும் ஆப் லைன் மூலமாக ரூ.50 செலுத்தலாம். பெண்களுக்கு கட்டணம் கிடையாது. 
ஆன் லைன் மூலமாக செலுத்துவோர் http://ssconline.nic.inhttp://ssconline2.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக செலுத்தலாம். ஆப் லைன் மூலமாக செலுத்துவோர் ஸ்டேட் பேங்க் சலான் மூலமாக செலுத்தலாம். சி.ஆர்.எப்.எஸ்., எனப்படும் மத்திய அரசுப் பணிகளுக்கான விண்ணப்ப ஸ்டாம்ப் மூலமாகவும் செலுத்தலாம். 
தேர்வு: எழுத்துத் தேர்வு அக்டோபர் 2015இல் நடத்தப் படும். இதில் ரீசனிங், கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பகுதிகள் இடம் பெறும். அப்ஜெக்டிவ் முறையில் இதில் கேள்விகள் இடம் பெறும். 
விண்ணப்பிக்கும் முறைhttp://ssconline.nic.in & http://ssconline2.gov.in இணைய தளங்கள் வாயிலாக 2 கட்டமாக விண்ணப்பிக்க வேண்டும். பிப்ரவரி 21 வரை இதில் விண்ணப்பிக்கலாம். முழு விபரங்களை அறிய பார்க்க வேண்டிய இணைய தளம்: http://ssc.nic.in

No comments:

Post a Comment