Wednesday, 25 February 2015

தருமபுரி அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள பிக்கிலி, கோட்டப்பட்டி ஆகிய கிளை அஞ்சல் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரி அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள பிக்கிலி, கோட்டப்பட்டி ஆகிய கிளை அஞ்சல் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கோட்ட கண்காணிப்பாளர் க.பாலசுப்பிரமணியன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தருமபுரி அஞ்சல் கோட்டத்தில் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி மற்றும் தீர்த்தமலை அருகேயுள்ள கோட்டப்பட்டி ஆகிய கிளை அஞ்சல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணயிடத்திற்கு 10-ஆம் வகுப்பு முடித்த, 18 வயது நிரம்பிய 65 வயதுக்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் கிராமத்தில் பணி நியமனத்திற்கு முன்பே தங்கியிருத்தல் வேண்டும். மேலும், அஞ்சல் அலுவலகம் இருப்பிடம் சொந்த பொறுப்பில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்துடன், கல்வி மாற்றுச் சான்றிதழ் நகல், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்ரு இரண்டு நன்னடத்தைச் சான்ற மற்றும் வருவாய்ச் சான்று ஆகியவற்றுடன் வருகிற மார்ச் 20-ஆம் தேதிக்குள், நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் முத்திரை இடப்பட்ட உறையின் மீது கிளை அஞ்சல் அலுவலர் பதவி என விண்ணப்பிக்கும் கிராமத்தின் பெயர் எழுதி, க.பாலசுப்பிரமணியன், அஞ்சல் கண்காணிப்பாளர், தருமபுரி கோட்டம்-636 701  என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment