Thursday, 26 February 2015

orientalinsurance

பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் பொதுத்துறையைச் சார்ந்த நான்கு நிறுவனங்களுள் ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனமும் ஒன்றாகும். இந்த காப்பீட்டு நிறுவனத்திற்கு நாடு முழுமையும் கிளைகள் உள்ளன. சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காக பலராலும் அறியப்படும் ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 246 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்: அக்கவுண்ட்ஸ் பிரிவில் 100ம், ஆக்சுவரியல் பிரிவில் 2ம், லீகல் பிரிவில் 44ம், மார்க் கெடிங் மற்றும் ஜெனரலிஸ்ட் பிரிவுகளில் தலா 50ம் சேர்த்து மொத்தம் 246 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 28.02.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிப்பதற்கான அடிப்படைக் கல்வித் தகுதியை 28.02.2015 அன்றுக்குள் பெற்றிருக்க வேண்டும். ஜெனரலிஸ்ட் பிரிவுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு சி.ஏ., பி.காம்., எம்.காம்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சட்டப் பிரிவுக்கு விண்ணப்பிக்க சட்டத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மார்கெடிங் பிரிவுக்கு எம்.பி.ஏ.,வை மார்க் கெடிங் அல்லது சேல்ஸ் பிரிவுகளில் சிறப்புப் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும். ஜெனரலிஸ்ட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் இரண்டு பிரிவினருமே டெஸ்ட் ஆப் ரீசனிங், டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் லாங்குவேஜ், டெஸ்ட் ஆப் ஜெனரல் அவேர்னஸ், டெஸ்ட் ஆப் குவாண்டிடேடிவ் ஆப்டியூட் ஆகிய அப்ஜெக்டிவ் வகைப் பிரிவுகளையும், ஆங்கிலத்தில் டெஸ்கிரிப்டிவ் வகைத் தேர்வையும் பொதுவாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஸ்பெஷலிஸ்ட் பிரிவினருக்கு அவர்கள் துறை சார்ந்த அப்ஜெக்டிவ் பிரிவு கூடுதலாக இருக்கும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 20.03.2015
இணையதளமுகவரி: http://www.orientalinsurance.org.in/

No comments:

Post a Comment