தமிழ்நாட்டின் சென்னை அருகே கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி
மையம் அமைந்துள்ளது. அணு சக்தித் துறையில் நமது நாட்டின் அடை யாளமாகத்
திகழும் இந்திரா காந்தி அணுஆராய்ச்சி மையத்தில் பி.எஸ்.சி., மற்றும்
எம்.எஸ்.சி., பட்டதாரிகளுக்கான ஆறு வார கால கோடைகால பயிற்சிகளை
வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி: பி.எஸ்.சி., பட்டப் படிப்பை இயற்பியல் அல்லது வேதியியலில் முடித்து, தற்சமயம் முதல் வருட எம்.எஸ்.சி., படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். 2015ல் எம்.எஸ்.சி., படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இந்தப் படிப்புகளில் மிகச் சிறந்த கல்வித் தகுதியைப் பெற்றவர்களுக்கும், ஆராய்ச்சி தொடர்பான பணி எதிர்காலத்தை மேற்கொள்ளுபவர்களுக்கும் இந்தப் பயிற்சி சிறந்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதர தகவல்கள்: ஆறுவாரகால பயிற்சிக்கு தேர்ந்து எடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் ஸ்டைபண்டாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பயிற்சியின் போது தியரி மற்றும் லேப் என்று தீவீர பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
கட்டணம் செலுத்தி இங்கு தங்கிப் படிக்கும் வசதியும் தேவைப்பட்டால் செய்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து 13.03.2015க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு: www.igcar.gov.in/igc2004/STIPAC_2015.pdf

No comments:
Post a Comment