Tuesday, 17 February 2015

தாட்கோ

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பதன் சுருக்கமே தாட்கோ. இதன் அலுவலகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை வங்கிக் கடனுதவியுடன் தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. பழங்குடியினருக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. 

தாட்கோ திட்டங்கள் குறித்த தகவல்களை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அவ்வப்போது பத்திரிகைகளுக்கு செய்திக் குறிப்புகளாக அறிவித்து வருகிறார்கள். 

தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. திட்டத் தொகையில் 30 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மானியம் நீங்கலாக திட்டத்தொகையில் மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும். 

இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சேர்வதற்கான தொழில் முனைவோர் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் அனைத்து தாட்கோ அலுவலகங்களிலும் கிடைக்கும். அல்லது www.tahdco.tn.gov.in அல்லது www.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கல்வித் தகுதி: 

பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்ப 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதும்.

வயது வரம்பு: 

18-35 (வேலையில்லா இளைஞர்கள்)

மாத உதவித்தொகை: 

சென்னை மாவட்டத்திற்கு ரூ.500/- மற்ற மாவட்டங்களுக்கு ரூ.400/- 2 புகைப்படங்கள், சாதிச் சான்றிதழ், வருமானச்சான்று, கல்வித் தகுதி மற்றும் பள்ளி மாற்று சான்று போன்ற விவரங்களுடன் கீழ்க்கண்ட விலாசத்தில் 20.02.2015 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    
மேலாண்மை இயக்குநர்,
தாட்கோ, எண்-31,
2வது சந்து, செனடாப் ரோடு,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018. 


தாட்கோ வழங்கும் தொழிற் பயிற்சிகள்: 

  பயிற்சிகள்                பயிற்சி காலம்      தகுதி

1. சில்லறை விற்பனை மேலாண்மை         2 மாதங்கள்    10 ம் வகுப்பு
2. எலக்ட்ரீஷியன்            12 மாதங்கள்    8ம் வகுப்பு
3. ஜ.சி.பி.பொக்லைன் போர்க்லிப்ட் ஆப்ரேட்டர்         3 மாதங்கள்      8ம் வகுப்பு
4. ஃபிட்டர்                12மாதங்கள்    8ம் வகுப்பு
5. மோட்டார் மெக்கானிக்            12 மாதங்கள்    8ம் வகுப்பு
6. அழகுக்கலை                3 மாதங்கள்    8ம் வகுப்பு
7. உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல்        12 மாதங்கள்    10ம் வகுப்பு
8. ஈவன்ட் மேனேஜ்மென்ட்            6 மாதங்கள்    10ம் வகுப்பு
9. கேட்/கேம் (ஆட்டோ டெஸ்க் சான்றிதழ்)         3 மாதங்கள்    12ம் வகுப்பு
10. ஹார்டுவேர்/நெட்வொர்க்            3 மாதங்கள்    12ம் வகுப்பு

No comments:

Post a Comment