Thursday, 26 February 2015

federal bank

நமது நாட்டிலுள்ள தனியார் துறை சார்ந்த ஷெட்யூல்டு வங்கிகளில் பெடரல் வங்கியும் ஒன்று. கேரளாவின் ஆலுவாவில் இதன்தலைமையகம் உள்ளது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் இருப்பதோடு இந்த வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள கிளரிக்கல் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 01.11.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 01.11.1990க்கு பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அறிவியல் புலத்தில் பட்டம் பெற்றிருந்தால் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களும், இதர பிரிவுகளில் பட்டம் முடித்திருந்தால் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களும் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆப்டியூட் டெஸ்ட், குழு விவாதம், நேர்காணல் என்ற முறைகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: பெடரல் வங்கியின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினராக இருந்தால் ரூ.500/-ம், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் ரூ.200/-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: பெடரல் வங்கியின் ஆப்டியூட் டெஸ்ட்டை தமிழ் நாட்டில் கோவை, மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் சென்று விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 06.03.2015
இணையதள முகவரி: http://www.federalbank.co.in

No comments:

Post a Comment