Tuesday, 3 March 2015

இந்திய அணுசக்தித் துறை-எக்ஸிகியூடிவ் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள 110 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 
இந்திய அணுசக்தித் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அணுவிலிருந்து மின்சக்தி தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் என்.பி.சி.ஐ.எல்., என்ற பெயராலேயே பெரும்பாலும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் எக்ஸிகியூடிவ் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள 110 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரங்கள்: என்.பி.சி.ஐ.எல்.,லில் காலியாக உள்ள 110 இடங்களில் 79 தற்போதைய
காலியிடங்களாகவும், இதர இடங்கள்: எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான பேக்லாக் இடங்களாகவும் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் மெக்கானிகலில் 55, எலக்ட்ரிகல் மற்றும் கெமிக்கலில் தலா 15, எலக்ட்ரானிக்சில் 8, இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் 7, இண்டஸ்ட்ரியல் அண்டு சேப்டி பிரிவில் 10 இடங்கள் உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதர தகவல்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி: தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள்: 20.03.2015
இணையதள முகவரி: www.npclonline.co.in

No comments:

Post a Comment