பாங்க் ஆப் பரோடாவில் புரொபேஷனரி அதிகாரி
நமது நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் பி.ஓ.பி., என்று பொதுவாக அழைக்கப்படும் பாங்க் ஆப் பரோடா வங்கி இந்தியாவின் சர்வதேச வங்கியாகத் திகழ்கிறது.இந்த வங்கிக்கு இந்தியாவில் 3 ஆயிரத்து 200 கிளைகள் இருப்பதுடன் 26 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. சிறந்த வாடிக்கையாளர் சேவையைத் தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கியில் மணிப்பால் பல்கலைக் கழகத்துடன் இணைந்துபடிப்புடன் கூடிய பணி வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1200 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது: விண்ணப்பதாரர்கள் 17.03.2015 அடிப்படையில் 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 18.03.1987க்கு பின்னரும் 17.03.1995க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது இறுதித் தேர்வை எதிர்கொள்பவர்கள் 01.06.2015க்குள் தங்கள் பட்டப் படிப்பு சான்றிதழ் அல்லது மதிப்பெண் பட்டியலைப் பெற்றுவிடும் பட்சத்தில் அவர்களும் இந்தப் படிப்புடனான வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.தேர்ச்சி முறை: ஆன்-லைன் தேர்வு பின்னர் குழுவிவாதம் மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். ஆன்-லைன் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் புதுச்சேரியில் எதிர்கொள்ளலாம்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-ஐ விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சார்ந்தவர்கள் ரூ.100/--மட்டும் செலுத்தினால் போதுமானது.விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க இறுதி நாள்: 17.03.2015இணையதள முகவரி: http://www.bankofbaroda.com/careers/Manipal.asp
No comments:
Post a Comment