Tuesday, 10 March 2015

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் பணியிடங்கள்/nurse

புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சியின் போது 1872ல் ஜிப்மர் மருத்துவமனை நிறுவப்பட்டது. 1964ல் ஜிப்மர் மருத்துவமனை என்ற பெயர் மாற்றம் கண்டது. மருத்துவத் துறையில் பல்வேறு முத்திரைகளைப் பதித்து வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள 40 ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 30.04.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஜெனரல் நர்சிங் அண்டு மிட்வைபரி பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பு அல்லது இதற்கு நிகரான கல்வித் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.250/-ஐ டி.டி., வாயிலாக The Director, JIPMER என்ற பெயரில் புதுச்சேரி பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத்தக்கதாக செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Director, JIPMER, Puducherry-605 006.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.04.2015
இணையதள முகவரிhttp://jipmer.edu.in/category/announcements/jobs/

No comments:

Post a Comment