மத்திய சுகாதாரம் மற்றும்
குடும்பநல அமைச்சகத்தின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டும் வரும் ஜிப்மர்
மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் (ஸ்டாப் நர்ஸ்) பணியிடங்களை நிரப்ப
எஸ்சி பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: ஜிப்மர் (ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் முதுகலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்)
மொத்தம் காலியிடங்கள்: 40
பணி: செவிலியர்(ஸ்டாப் நர்ஸ்)
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600.
வயதுவரம்பு: 03.04.2015 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஜெனரல் நர்ஸிங் மற்றும் மிட்-வைபரி
அல்லது அதற்கு இணையான பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின்
மூலமாக பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் இந்திய நர்ஸிங் கவுன்சில் சட்டம் 1947ன் கீழ் நர்ஸ் அண்டு
மிட்-வைபரியாக பதிவு செய்திருத்தல் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை இயக்குநர், ஜிப்மர்
என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் புதுச்சேரியில் மாற்றத்தக்கதாக
வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம்
செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், ஜிப்மர், புதுச்சேரி-605006
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.04.2015 மாலை 4.30 மணிக்குள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://jobexamnews.com/wp-content/uploads/2015/03/Notification_JIPMER_Staff_Nurse_vacancy_2015.pdf
என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment