Tuesday, 10 March 2015

ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் டெக்னிகல் பயிற்சி

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் அமைந்துள்ள ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 1972ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் ஐ.எஸ்.ஓ., 9001:2000 தரச் சான்று பெற்ற பெருமைக்குரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பதில் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தில் அப்ரன்டிஸ்ஷிப் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள 50 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி
பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பயிற்சிக் காலம்: 
இந்த அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி ஒரு வருட காலத்திற்கானது.
ஸ்டைபண்ட் எவ்வளவு?:
 இந்தப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதம் ரூ.1970/- ஸ்டைபண்டாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை
நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்
த்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Dy. Manager (HR), Scooters India Limited, PO: Sarojini Nagar, Lucknow (UP)-226008 
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 20.03.2015
இணையதள முகவரி: <http://www.scootersindia.com/html/job_openings.htm>

No comments:

Post a Comment