Tuesday, 10 March 2015

இந்தியன் ஆயில் கழகத்தில் டிப்ளமோ தகுதிக்கு வேலை வாய்ப்பு



     மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கழகத்தின் (Indian Oil Corporation Limited) மதுரா சுத்திகரிப்பு ஆலையில் காலியாக உள்ள 41 ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் - மிக்ஷி (உற்பத்தி)


17 இடங்கள். (பொது - 9, எஸ்சி - 3, ஒபிசி - 5).

சம்பளம்:


ரூ.11,900 - 32,000.

வயது வரம்பு:


18 முதல் 26க்குள்.

தகுதி:

கெமிக்கல்/ ரீபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது கணிதம்/ இயற்பியல்/ வேதியியல்/ தொழில் வேதியியல் பாடத்தில் பி.எஸ்சி., மற்றும் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம்.

2. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் - மிக்ஷி (பவர் மற்றும் யுடிலிட்டி)

2 இடங்கள். (எஸ்சி - 1, பொது - 1).

சம்பளம்:

ரூ.11,900 - 32,000.

வயது வரம்பு:

18 முதல் 26க்குள்.

தகுதி:

மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ. பாய்லர் தகுதி சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அத்துடன் பெட்ரோலிய சுத்திகரிப்பு/ பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையில் சம்பந்தப்பட்ட பிரிவில் ஒரு வருட பணி அனுபவம்.

3. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் - மிக்ஷி (மெக்கானிக்கல் - பராமரிப்பு)

10 இடங்கள். (பொது - 5, எஸ்சி - 2, ஒபிசி - 3).

சம்பளம்:

ரூ.11,900 - 32,000.

வயது:

18 முதல் 26க்குள்.

தகுதி:

மெக்கானிக்கல் பாடத்தில் 3 வருட டிப்ளமோ அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் டிரேடில் ஐடிஐ. டிப்ளமோ படித்தவர்கள் ஒரு வருட பணி அனுபவமும், ஐடிஐ படித்தவர்கள் 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

4. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (இன்ஸ்ட்ரூமென்டேசன்):

5 இடங்கள். (பொது - 3, எஸ்சி - 1, ஒபிசி - 1).

சம்பளம்:

11,900 - 32,000.

வயது வரம்பு:

18 முதல் 26க்குள்.

தகுதி:

இன்ஸ்ட்ரூமென்டேசன்/ இன்ஸ்ட்ருமென்டேசன் எலக்ட்ரானிக்ஸ்/ இன்ஸ்ட்ருமென்டேசன் கன்ட்ரோல் பாடத்தில் 3 வருட டிப்ளமோ மற்றும் ஒரு வருட பணி அனுபவம்.

5. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் - மிக்ஷி (பயர் மற்றும் சேப்டி)

7 இடங்கள். (பொது - 4, எஸ்சி - 1, ஒபிசி - 2).

வயது:
18 முதல் 26க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயர் மற்றும் சேப்டி பாடப்பிரிவில் சப் ஆபீசர் படிப்பை முடித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பயர் மற்றும் சேப்டி பிரிவில் ஒரு வருட பணி அனுபவம்.

உடற்தகுதிகள்:


உயரம் - 165 செ.மீ., எடை: 50 கிலோ. மார்பளவு - சாதாரண நிலையில்: 81 செ.மீ., விரிவடைந்த நிலையில்: 86.5. செ.மீ.,

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100. பொது மற்றும் ஒபிசியினர் இதை 'Senior Accounts Officer, Mathura Refinery' என்ற பெயரில் மதுராவில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி,யினர், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

P.O. Box No: 1102,
Jeya Nagar 3rd Block,
BANGALORE 560 011.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.3.2015.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 23.3.2015.

No comments:

Post a Comment