Tuesday, 3 March 2015

ந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷனுக்கு-அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சி

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷனுக்கு உட்பட்ட காம்பட் வெகிகள் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் என்ற அமைப்பில் அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சிக்காக ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. ணிஙீ மிஜிமி அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சி இது.

டிரேடு            காலியிடங்கள் எண்ணிக்கை

ஃபிட்டர்                30
டர்னர்                7
மெஷினிஸ்ட்            15
எலெக்ட்ரீஷியன்            20
வெல்டர் (கியாஸ் - எலெக்ட்ரிக்)        6
மெக்கானிக் (மோட்டார் வாகனம்)        12
கார்பெண்டர்            5
புரோகிராமிங் அண்ட் சிஸ்டம்
அட்மினிஸ்ட்ரேஷன் அசிஸ்டென்ட்    15

மொத்தம்                110

பயிற்சிக் காலம்:

ஒரு வருடம்

ஊக்கத் தொகை:


வெல்டர் - புரோகிராமிங் அண்ட் சிஸ்டம்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அசிஸ்டென்ட் பதவிக்கு மாதம் ரூ.2400/-

இதர டிரேடுகளுக்கு மாதத்திற்கு 2800/- (திருத்தியமைக்கப்பட்டதன் கீழ் ஊக்கத்தொகை விகிதம்) அப்ரண்டிஸ் பயிற்சி காலம் முழுவதும் இதர படிகள் வழங்கப்படமாட்டாது. SC/ST/OBC - P.H. (P.C.)

அபேட்சகர்களுக்கான ஒதுக்கீடு: அப்ரண்டிஸ் சட்டம் 1961-ன் கீழ் விதிகளில் உள்ள சம்பந்தப்பட்ட ஷெட்யூல்படி.

தேர்ந்தெடுக்கும் முறை:

ஆங்கிலம், பொது அறிவு, மற்றும் புத்திக்கூர்மை/திறன் அறிதல் - 40% மற்றும் RDATயால் நிர்ணயிக்கப்பட்டபடி சம்பந்தப்பட்ட குரூப்களின் கீழ் பாடத் தேர்வு தொகுப்பு -60% ஆகியவற்றை உள்ளடக்கி ‘பல்பொருள் கொள்குறி வகை தேர்வு’ அடிப்படையில் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?


1. விண்ணப்பப் படிவத்தை செய்தித்தாள்களில் வந்த மாதிரிப் படிவத்தின்படி A4 வெள்ளைத் தாளில் டைப் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும்.

2. தேவையான இணைப்புகளுடன் (சான்றிதழ் நகல்கள் முதலியன) விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி அனுமதி அட்டையுடன் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி படிவத்தில் விண்ணப்பம் நேரடியாக ‘டைரக்டர் CVRDE, ஆவடி, சென்னை - 600054-க்கு அனுப்பப்பட வேண்டும்.

3. நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் ‘டைரக்டர் CVRDE, ஆவடி, சென்னை’ என்று ரூ.30/- கோடிட்ட போஸ்டல் ஆர்டர் இணைக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் அனுமதி அட்டையில் ஒட்டப்பட்ட இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், அரசு விதிப்படி ஏதேனும் மத்திய/ மாநில அரசு அதிகாரி அல்லது ஏதேனும் இதர தகுந்த அதிகாரியால் கையொப்பமிடப்பட வேண்டும்.

4. SC/ST உடல் ஊனமுற்றோர் (PH) / உடல் பாதிக்கப்பட்டோர் (PC) போஸ்டல் ஆர்டர் இணைக்கத் தேவையில்லை.

5. விண்ணப்பப் படிவம் மற்றும் அனுமதி அட்டை அடங்கிய உறையில் ‘EXITI டிரேடு அப்ரெண்டிஸ்’க்கான விண்ணப்பம் என பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 மார்ச் 2015

No comments:

Post a Comment