Tuesday, 10 March 2015

நெடுஞ்சாலைத்துறையில் பி.இ. படித்தவர்களுக்கு மேலாளர் பணி

போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, கப்பல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘National Highways Authority of India‘வில் துணை மேலாளர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பி.இ. சிவில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம்:


துணை மேலாளர் (டெக்னிக்கல்):

30 இடங்கள். (பொது - 12, ஒபிசி - 9, எஸ்சி - 6, எஸ்டி - 3).

வயது:

10.4.2015 தேதிப்படி 35க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

தகுதி:

பிஇ பட்டப்படிப்பில் சிவில் பிரிவில் பட்டம். கேட் - 2015 தேர்வு எழுதியவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

கேட் - 2015 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

கேட் - 2015 மதிப்பெண் அட்டையை பெற்றபின் நெடுஞ்சாலைத்துறை இணையதளமான www.nhai.org லிருந்து மாதிரி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

DGM (HR -A)III,
National Highways of India,
G 5 - 6, Sector10,
Dwarka, NEWDELHI.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.4.2015.

No comments:

Post a Comment