இந்தியா மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட நாடு. அதனால் நம்மிடம் வலிமை
வாய்ந்த கடற்படையும் இருக்கிறது. மேற்குக் கடற்படைத் தலைமையகம் - மும்பை,
கிழக்குக் கடற்படைத் தலைமையகம் - விசாகப்பட்டினம், தெற்குக் கடற்படைத்
தலைமையகம் - கொச்சி என இந்திய கடற்படைக்கு 3 இடங்களில் தலைமை அலுவலகங்கள்
உள்ளன.
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு என்பது நிச்சயம் சவால்கள் நிறைந்ததுதான். இந்தத் துறையில் ஒருவருக்கு சிறந்த தனிமனித அனுபவம் கிடைப்பது மட்டுமின்றி, தனது தனித்திறமையை நல்ல முறையில் வெளிப்படுத்தவும், அதன் மூலம் புகழ் பெறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
கடற்படை வேலையில் சேர்வதற்கு தேவையான தனித்திறன்கள்
வாழ்க்கையின் பல்வேறு நிலைகளுக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்ளும் திறன், தைரியம், தலைமைப் பண்பு, தியாக மனப்பான்மை, நல்ல உடற்கட்டு, சுயமாக சிந்திக்கும் திறன், ஒழுக்கம், தீர்மானமாக இருத்தல், தெளிவான சிந்தனை, நன்கு முடிவெடுக்கும் திறன், தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வு போன்றவை வேண்டும்.
கடற்படையில் சேர வேண்டுமானால், ஆண்டுக்கு இருமுறை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி தேர்வை எழுத வேண்டும். நீங்கள் பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தால் என்.டி.ஏ. தேர்வை எழுதலாம். திருமணமாகாத இளம் ஆண்கள் மட்டுமே இத்தேர்வை எழுத முடியும்.
இதற்கான தேர்வு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும். இந்த மூன்றிலும் தேவையான அளவு நீங்கள் செயல்பட்டிருந்தால்தான், என்.டி.ஏ. தேர்வில் தேறியதாக அறிவிக்கப்படுவீர்கள். நீங்கள் பட்டப்படிப்பு முடித்திருந்தால், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சி.டி.எஸ். தேர்வை எழுதலாம். இவற்றுக்கு அடுத்தபடியாக கேரளாவில் உள்ள ஐ.என்.ஏ. என்று சொல்லப்படும் இண்டியன் நேவல் அகாடமியில் சேர்ந்தும் படிக்கலாம்.
கடற்படை வேலையால் கிடைக்கும் சலுகைகள்
இந்தப் படையில் சேருவதன் மூலம் பல்வேறு சலுகைகளை நாம் பெற முடியும். அதிகாரி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ வசதிகள், உணவகம், கிளப் மற்றும் விளையாட்டு வசதிகள் ஆகியவை, மிகவும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன.
அருமையான இடங்களில், அரசின் சார்பாக தங்குமிடங்கள் வழங்கப்படுகின்றன. அனைத்து சலுகைகளுடனும் பென்ஷன் வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 60 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 20 நாட்கள் Casual Leave வழங்கப்படுகிறது. 300 நாட்கள் வரை Leave Encashment உண்டு. இலவச ரேஷன் சலுகையும் உண்டு.
அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ற வகையிலான வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவரின் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஏற்ப அவருக்கான பதவி உயர்வு உள்ளிட்ட இதர சலுகைகள் வழங்கப்படுகிறது. ஒரு கடற்படை அதிகாரியின் ஊதியம், அவர் எந்தப் பிரிவில் மற்றும் எந்தப் பணி நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தது. அனைவருக்கும் அனுபவம் மற்றும் பதவி உயர்வைப் பொறுத்து, சம்பளம் அதிகரிக்கிறது.
இவ்வளவு சிறப்புகளை கொண்ட இந்திய கடற்படையில் சேர்வதற்கான பயிற்சியை பெற ஒரு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. இண்டியன் நேவல் அகாடமி எழிமலா, கேரளாவில் உள்ள பயிற்சி மையம் ஆள்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எக்சிகியூட்டிவ் பிராஞ்ச்(ஜெனரல் சர்வைஸ்/ஹைட்ரோ கேடர்) மற்றும் டெக்னிக்கல் பிராஞ்ச் (ஜெனரல் சர்வ்வைஸ்/சப் மெரைன்) ஆகிய பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று, அதன்பின் பணியில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி:
பி.இ./பி.டெக் பட்டப்படிப்பில் 65 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
ஜனவரி 2, 1991 மற்றும் ஜூலை 1, 1996க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராகவும், 19 முதல் 25 வயதுக்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும்.
உடல்தகுதி:
உயரம் 157 சென்டிமீட்டரும் அதற்கேற்ற உடல் எடையும் இருக்க வேண்டும். எக்சிகியூட்டிவ் (ஜி.எஸ். ஹைட்ரோ) கேடருக்கு 6/12ம், டெக்னிக்கல் (ஜி.எஸ்.சப்மெரைன் ஸ்பெஷலிசேஷன்) பதவிக்கு 6/24ம் பார்வைத் திறன் இருக்க வேண்டும். உடலில் டாட்டூ இல்லாமல் இருப்பது நல்லது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நபர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை, சம்பள விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கும் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
கடைசி நாள்: ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 4, 2015.

No comments:
Post a Comment