Tuesday, 3 March 2015

புதுடெல்லி ரேஸ்கோர்சில் உள்ள விமானப்படை நிலையத்தில் காலியாக உள்ள லோய் டிவிசன் கிளார்க் உள்ளிட்ட 40 குருப் சி பணி

புதுடெல்லி ரேஸ்கோர்சில் உள்ள விமானப்படை நிலையத்தில் காலியாக உள்ள லோய் டிவிசன் கிளார்க் உள்ளிட்ட 40 குருப் சி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. லோயர் டிவிசன் கிளார்க்:
1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200 -20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் டைப் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வு 10 நிமிடங்கள் நடைபெறும். வயது: 8.3.2015 அன்று 18 முதல் 27க்குள்.

2. பல்நோக்கு பணியாளர்:
13 இடங்கள். (பொது -8, ஒபிசி -4, எஸ்டி -1). சம்பளம்: ரூ.5,200 -20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1800. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் வாட்ச்மேன் அல்லது லஸ்கர் அல்லது ஜீஸ்டட்னர் ஆபரேட்டர் அல்லது மாலியாக பணிபுரிந்திருக்க வேண்டும்.

3. சபேவாலா:
4 இடங்கள். (பொது -1, ஒபிசி -2, எஸ்டி -1). சம்பளம்: ரூ.5,200 -20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. தகுதி: மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி.

4. உணவு விடுதி ஊழியர்:
2 இடங்கள். (பொது -1, ஒபிசி -1). சம்பளம்: ரூ.5,200 -20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. தகுதி: மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

வயது:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 25க்குள். எஸ்சியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்குwww.indianairforce.gov.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Air Officer Commanding, Air Force Station,
Race Course, NEWDELHI 110003.


விண்ணப்பிக்க கடைசி நாள்:8.3.2015.

No comments:

Post a Comment